sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

13


UPDATED : ஜன 24, 2026 01:52 PM

ADDED : ஜன 24, 2026 01:50 PM

Google News

UPDATED : ஜன 24, 2026 01:52 PM ADDED : ஜன 24, 2026 01:50 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: சேலம் மேச்சேரி பஸ் நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும், நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது என்று கூறி போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது. திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம்.

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us