தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ., காலடியில் கவிழ்ந்த தி.மு.க.,: த.வெ.க., கடும் விமர்சனம்

பா.ஜ., காலடியில் கவிழ்ந்த தி.மு.க.,: த.வெ.க., கடும் விமர்சனம்

பா.ஜ., காலடியில் கவிழ்ந்த தி.மு.க.,: த.வெ.க., கடும் விமர்சனம்


ADDED : நவ 28, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘முதல்வர் விஜய் கூறியதைபோல, பா.ஜ.,வின் காலடியில் தி.மு.க., கவிழ்ந்துள்ளது,’’ என, த.வெ.க., கடுமையாக விமர்சித்துள்ளது.

த.வெ.க., அறிக்கை:

‘டில்லி அணியா, தமிழ்நாடு அணியா; பா.ஜ.,வை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள் தான்; பா.ஜ.,வுடன் ஒட்டோ உறவோ இல்லை; கருப்புக்கொடி ஏந்தி டில்லி ஆணவத்தை எதிர்ப்போம்; லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதே நம் சுயமரியாதை’ என, தி.மு.க., தலைமை பேசி வந்தது.

இந்த ‘பஞ்சரான பஞ்ச்’ வசனங்கள் எல்லாம், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்து விட்டவை. இப்போது, மக்கள், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து விரட்டி விட்டதால், அவர்களின் வசனங்கள் எல்லாம் எப்படி மாறி உள்ளன என்பதை பார்த்து, உலகமே சிரிக்கிறது.

பா.ஜ.,வின் தொகுதி மறு வரையறையை எதிர்ப்பதே சுயமரியாதை என கூறியவர்கள், இப்போது அதே பா.ஜ.,வின் திட்டத்தை ஏற்று வரவேற்றுள்ளனர். இது, இன்று எடுக்கப்பட்ட முடிவல்ல என, தி.மு.க., ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.

முதல்வர் விஜய் கூறியதை போல, பா.ஜ.,வின் காலடியில் தி.மு.க., கவிழ்ந்துள்ளது. பா.ஜ.,வுடன் மறைமுக உறவில் இருந்து, இன்று நேரடி உறவிற்கு வந்துள்ளனர்.

அ.தி.மு.க.,வின் ‘ரிங் மாஸ்டர்’ ஆக பிரதமர் மோடி செயல்படுகிறார் என, தி.மு.க., தலைமை கூறியது. தற்போது, தங்களுக்கும், ‘ரிங் மாஸ்டர்’ பா.ஜ.,தான் என்பதை, தி.மு.க., முழுமனதோடு ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி ஓர் அரசியல் சூதாட்டம் ஆடுவதற்கு பெயர்தான் கொள்கையா?

தி.மு.க.வின் இந்த முடிவை, சிறுபான்மையினரும், தமிழக மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள். இத்தனை மோசடிகளையும் செய்து விட்டு, ‘எப்போது வாள் எடுக்க வேண்டும்; எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என, தங்களுக்குத் தெரியும்’ என்று தி.மு.க. தலைமை சொல்கிறது.

தமிழக மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும், அவர்தம் நலன்களுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக, தி.மு.க., தங்களின் முனைமழுங்கிய மொக்கை வாளை எடுத்து சுழற்றத் தொடங்கி உள்ளது.

தங்கள் குடும்பத்திற்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து காப்பதற்காக, ‘சுயநல’ கேடயத்தையும், தி.மு.க., எடுத்துள்ளது. இதற்கான பரிசாக, இனி வரும் எல்லா தேர்தலிலும் தி.மு.க.,விற்கு அதலபாதாள தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசத்திற்கே ஆபத்து!


லோக்சபா தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் தி.மு.க.,விற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள.
*காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: வேடம் பூண்ட எட்டப்பன் வேடம் கலைந்தது.
* வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தி.மு.க.,வின் நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து. சதி அரசியலுக்கு வழிவகுக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட தி.மு.க.,வின் நிலைப்பாடு தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
* மார்க்சிஸ்ட் கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: தொகுதி மறுவரையறை தொடர்பான பா.ஜ.,வின் முயற்சிக்கு, தி.மு.க., எந்த அடிப்படையில் ஆதரவு அளித்தது என்பதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us