சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார்
சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார்
ADDED : மே 16, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பலமுறை சர்ச்சை கருத்துகளால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். நடிகை குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். லோக்சபா தேர்தலின்போது பிரசார மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பா.ஜ., வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் சமூக வலைதளத்தில் ராதிகா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.