தே.மு.தி.க., வங்கிக் கணக்கை முடக்குவோம் என அச்சுறுத்தல் வந்தது: பிரேமலதா பேச்சு
தே.மு.தி.க., வங்கிக் கணக்கை முடக்குவோம் என அச்சுறுத்தல் வந்தது: பிரேமலதா பேச்சு
UPDATED : ஏப் 04, 2024 12:30 PM
ADDED : ஏப் 04, 2024 12:08 PM

திருவள்ளூர்: தே.மு.தி.க.,வின் வங்கிக் கணக்குகளை முடக்குவோம் என பா.ஜ.,விடம் இருந்து அச்சுறுத்தல் வந்தது என தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது: அ.தி.மு.க., அலுவலகத்தில் ஒப்பந்தம் போடும் வரை பா.ஜ.,விடம் இருந்து எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து ஜெயலலிதா போன்று முடிவு எடுத்தேன். இந்த முறை அ.தி.மு.க., உடன் தான் கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என உறுதியாக இருந்தேன். மக்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.
பா.ஜ.,விடம் இருந்து எத்தனையோ நிர்பந்தங்கள் வந்தன. எங்களின் வங்கிக்கணக்குகளை எல்லாம் முடக்குவோம் என பயமுறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். எத்தனை சோதனைகள் வந்தாலும் பயப்படப் போவது இல்லை. இவ்வாறு பிரேமலதா பேசினார்.

