கேட்கும் தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
கேட்கும் தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
ADDED : மார் 06, 2024 06:53 AM

மதுரை: 'நாங்கள் கேட்கும் தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்' என, மதுரையில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேர்தல் பத்திரங்கள், எலக்ட்ரோ பாண்டுகள் வாங்கிய பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் திருப்பி கொடுக்கவும், மார்ச் 6 க்குள் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பா.ஜ., நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை பிரதமர் மோடி ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார். இதை கண்டித்து இன்று (மார்ச் 6) அனைத்துமாவட்டங்களிலும் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தமிழை ஆதரிப்பவர்களை மத்திய அரசு எதிர்க்கிறது. ஆனால் தமிழகத்தில் ஓட்டுக்காக வேஷம் போடுகிறது. தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மோடி செல்லவில்லை. ஆனால் லோக்சபா தேர்தலுக்காக ஓட்டு கேட்க வருகிறார். மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.
தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு தொடர்ந்து நடக்கிறது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும். தமிழகத்தில் ராகுல் போட்டியிட விரும்புகிறேன். காங்., அ.தி.மு.க., எவ்வித பேச்சும் நடத்தவில்லை என்றார். முன்னதாக மதுரை, விருதுநகர் லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டம் நடந்தது. இரண்டு மாவட்டங்களின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

