ADDED : நவ 14, 2025 07:00 AM

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அடிக்கடி அமைச்சர் பதவி இழப்பவர். '2026 தேர்தலுக்கு பின், அ.தி.மு.க. இருக்கவே இருக்காது' எனக் கூறியுள்ளார். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர். அ.தி.மு.க.வில் இருந்து கொள்ளையடித்து சென்றவர். தற்போது அ.தி.மு.க. இருக்காது என்கிறார்.
கருணாநிதியால் கூட அ.தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை. தி.மு.க.,வில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வை செந்தில் பாலாஜி வம்புக்கு இழுக்கிறார். நாங்கள் விமர்சனம் செய்தால், தி.மு.க.,வினர் தாங்க மாட்டார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு, தொண்டர்கள் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கோடு பீடுநடை போடுகிறது. இக்கட்சியை யாராலும் அழிக்க முடியாது.
- ஜெயராமன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

