உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 23, 2026 07:12 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், திருநெல்வேலியில் அளித்த பேட்டி:
முக்கிய பிரச்னைகளில், முதல்வர் விஜய் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டளித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தே.ஜ., கூட்டணியில் இருந்து த.ம. மு.க., விலகுகிறது. கூட்டணியில் இருந்து விலகினாலும், கூட்டணி தலைவர்களுடனான நட்பு தொடரும். உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.,வில் இணைந்தவர்களை இடைத் தேர்தலில் போட்டியிட அனு மதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
