தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கரப்பானை கட்டிக்கொள்ளும் தி.மு.க.,

கரப்பானை கட்டிக்கொள்ளும் தி.மு.க.,

கரப்பானை கட்டிக்கொள்ளும் தி.மு.க.,


UPDATED : அக் 14, 2026 07:03 PM

ADDED : அக் 14, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:03 PM ADDED : அக் 14, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

பா.ஜ., கூட்டணி அல்லது காங்கிரஸ் கூட்டணியில், இடம் பெற வாய்ப்பு இல்லாததால், தன் பார்வையை, கரப்பான் பூச்சி கட்சி பக்கம், தி.மு.க., திருப்பி உள்ளது. டில்லியில், கரப்பான் கட்சி நிர்வாகிகள் கைதுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், காங்., தலைமையிலான ‘இண்டி’ கூட்டணியில், தி.மு.க., இடம் பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்ததும், புதிதாக வெற்றி பெற்ற த.வெ.க., கூட்டணியில், காங்கிரஸ் இணைந்து, த.வெ.க., கூட்டணி அரசில் இரு அமைச்சர் பதவியையும் பெற்றது.

இது, தி.மு.க,வுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்க்க வேண்டிய நிலையில் தி.மு.க., உள்ளது. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருக்கிறது. காங்., தலைமையிலான ‘இண்டி’ கூட்டணியில் த.வெ.க., உள்ளது.

இதனால், தேசிய அளவில், மூன்றாவது அணியை உருவாக்க, தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி சந்தித்து, மூன்றாவது அணி குறித்து பேசினார். இது, கைகூடவில்லை.

இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு திருத்தம் விவகாரம் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, ‘இண்டி’ கூட்டணி சார்பிலும், கரப்பான் பூச்சி கட்சி சார்பிலும், டில்லியில் போராட்டம் நடைபெறுகிறது.

டில்லியில், ஜந்தர் மந்தர் பகுதிக்குள், நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த, கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததற்கு, கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே நன்றி கூறியுள்ளார். பா.ஜ., – காங்., பக்கம் போக முடியாததால், தி.மு.க., தன் பார்வையை கரப்பான் பூச்சி கட்சி பக்கம் திருப்பியுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

= புல் அவுட் =


சட்ட உதவி வழங்க தயார்
எத்தனை போாரட்டக்காரர்களை, மத்திய பா.ஜ., அரசால் கைது செய்ய முடியும்; எத்தனை இளைஞர்களின் குரல்களை ஒடுக்க முடியும்? கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ்க்கு ஆதரவாக இருப்போம். அவர்களுக்கு தேவையான, அனைத்து சட்ட உதவிகளையும் வழங்க, தி.மு.க., தயாராக உள்ளது.
எவ்வளவு அதிகமான இளைஞர்களை, சிறையில் அடைக்கின்றனரோ, அவ்வளவு அதிக எதிர்ப்பு குரல் எழும்பும். எந்த அரசியல் சார்பும் இல்லாத, சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவர்.
ஸ்டாலின்
தலைவர், தி.மு.க.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us