தி.மு.க.,வுக்கும் காங்.,க்கும் ஒரே கொள்கை உள்ளதா?: அன்புமணி கேள்வி
தி.மு.க.,வுக்கும் காங்.,க்கும் ஒரே கொள்கை உள்ளதா?: அன்புமணி கேள்வி
ADDED : மார் 31, 2024 05:31 PM

சென்னை: ‛‛ இரு வேறு கொள்கை கொண்ட பா.ஜ., பா.ம.க., கூட்டணி அமைத்தது குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.,வும், காங்கிரசுக்கும் ஒரே கொள்கை உள்ளதா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனை ஆதரித்து அன்புமணி பேசியதாவது: எங்கே சென்றாலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். பா.ம.க.,வின் கொள்கை வேறு. பா.ஜ.,வின் கொள்கை வேறு என சிலர் விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கை உள்ளதா? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரே கொள்கை உள்ளதா? இரு கட்சிகளும் கேரளாவில் அடித்துக் கொள்கின்றன.
60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதா ? பிரதமரிடம் பேசி ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை கொண்டு வருவோம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுக வாக்குறுதி மிகப்பெரிய மோசடி. சமூக நீதி பேசும் ராமதாஸ், பா.ஜ., உடன் எப்படி கூட்டணி அமைத்தார் என முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். 1999ல் கருணாநிதி பா.ஜ., கூட்டணிக்கு செல்ல வில்லையா? 5 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ., உடன் சேர்ந்து ஆட்சி நடத்த வில்லையா? இவ்வாறு அன்புமணி பேசினார்.

