உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 25, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
அனைத்து மாநகராட்சிகளிலும், துாய்மை பணிகளை, தனியார் ஒப்பந்தத்தில் விடும் திட்டத்தை, த.வெ.க., அரசு கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்கு 50,000 ரூபாய்; சிசேரியன் பிறப்புக்கு, ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. கட்டணம் அதிகம் என்றாலும், எழை, எளியோர் கூட தாய், சேய் பாதுகாப்பு கருதி, தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.
எனவே, தங்க மோதிரம் வழங்குவதற்கான 755 கோடி ரூபாயை வைத்து, அரசு மருத்துவமனைகளில், உயரிய வசதிகளுடன் கூடிய 'பிரசவ வார்டுகளை' உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு போடும் தங்க மோதிரம், சில மாதங்களிலேயே, குழந்தைக்கு பொருந்தாமல் போகும்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு இழந்ததை, ஏளனம் செய்யும் வகையில், முதல்வர் விஜய் பேசியது, அப்பொறுப்புக்கு உகந்தது இல்லை. கட்சி மேடைகளில் கூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டசபையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
- திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
