UPDATED : அக் 15, 2026 09:27 PM
ADDED : அக் 15, 2026 09:24 PM
சென்னை: மருத்துவ ஆவணங்கள், நோயாளிகளின் மருத்துவஅறிக்கைகளை, தொலை துாரத்தில் இருந்தே அங்கீகரித்து, டிஜிட்டல் முறையில் சான்றொப்பம் அளிக்க, டாக்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து,தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
டிஜிட்டல் சான்றொப்பங்களை ஏற்பது தொடர்பாக, பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அவற்றை தெளிவுப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஆய்வக அறிக்கைகள், ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் மற்றும் நோயாளிகள் வீடு திரும்பும்போது வழங்கப்படும் மருத்துவ அறிக்கைகளை, ‘தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000’ன் கீழ், டிஜிட்டல் கையொப்பம் வாயிலாக, டாக்டர்கள் தொலைதுாரத்தில் இருந்தே அங்கீகரிக்கலாம்.
அதேநேரம், மருத்துவ அறிக்கை மற்றும் அதன் துல்லியத் தன்மைக்கான முழு பொறுப்பும், சம்பந்தப்பட்ட டாக்டரையே சாரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
