தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்

த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்

த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு மருத்துவமனையில், டாக்டரை திட்டி வீடியோ வெளியிட்ட, த.வெ.க., -– எம்.எல்.ஏ.,வுக்கு, அரசு டாக்டர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனையில், நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., சரவணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்த டாக்டர், அறையில் துாங்கிக் கொண்டிருந்ததால், அவரை எழுப்பி, எம்.எல்.ஏ., திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம், சமூக சமத்துவதற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல டாக்டர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசாங்க நடைமுறைகள் மற்றும் மருத்துவ துறையின் பணி முறைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, அரசு டாக்டர் மீது, எம்.எல்.ஏ., வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற துறைகளை போலின்றி, டாக்டர்கள் தொடர்ந்து, 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.

செவிலியர்கள் உள்ளிட்ட மற்ற ஊழியர்களுக்கு, சுழற்சி முறையில் பணி பங்கீடு இருக்கும் வேளையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய அரசு மருத்துவமனைகளில், ஒரே ஒரு டாக்டர் மட்டுமே, பணியாற்றும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில், காலை, 7:30 முதல், மறுநாள் காலை 7:30 மணி வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டிய கடடாயத்தில் டாக்டர்கள் உள்ளனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்கு காத்திருக்கும் போது, டாக்டர் உறங்கினால் தவறு. நோயாளிகள் யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், டாக்டர் ஓய்வெடுப்பது எந்தவிதத்திலும் தவறு கிடையாது. எனவே, அரசு ஊழியர்கள் மீது, ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் சுமத்துவதை கைவிட வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us