sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய வழிகாட்டுதல் மதிப்பு தயாரிக்கும் பணி : நவ., முதல் பத்திரப்பதிவு கட்டணம் இரட்டிப்பு

/

புதிய வழிகாட்டுதல் மதிப்பு தயாரிக்கும் பணி : நவ., முதல் பத்திரப்பதிவு கட்டணம் இரட்டிப்பு

புதிய வழிகாட்டுதல் மதிப்பு தயாரிக்கும் பணி : நவ., முதல் பத்திரப்பதிவு கட்டணம் இரட்டிப்பு

புதிய வழிகாட்டுதல் மதிப்பு தயாரிக்கும் பணி : நவ., முதல் பத்திரப்பதிவு கட்டணம் இரட்டிப்பு


ADDED : செப் 20, 2011 11:07 PM

Google News

ADDED : செப் 20, 2011 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு பின் வழிகாட்டுதல் மதிப்பு புதுப்பிக்கப்பட உள்ளதால், பத்திரப்பதிவு கட்டணம் வரும் நவ., முதல் இரட்டிப்பு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில், வழிகாட்டுதல் மதிப்புப்படி, பத்திரங்கள் பதியப்படுகிறது. தற்போது 2007 வழிகாட்டுதல் மதிப்பு தான் நடைமுறையில் உள்ளது. ஆனால், நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விட்டது. பத்திரப்பதிவு வழிகாட்டுதல் மதிப்பையும் உயர்த்த ஆய்வு நடந்து வருகிறது. இதற்காக சொத்துக்களின் தரம் குறித்து அந்தந்த பகுதி வி.ஏ.ஒ.,க்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர், அப்பகுதியில் உள்ள முக்கிய நபர்கள் ஆகியோரிடம் நிலத்தின் உண்மையான மதிப்புகளை கேட்டு, அவர்களின் உறுதிமொழியின்படி புதிய மதிப்பு நிர்ணயம் செய்கின்றனர். இதன்பின், வட்ட துணைக் குழுவின் ஒப்புதல் பெற்று, மாவட்ட குழுவான கலெக்டர், டி.ஆர்.ஓ., பத்திரப்பதிவு துறை துணை தலைவர், மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர்கள் ஊராட்சி, பேரூராட்சி ஆகியோர் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, மக்களின் பார்வைக்கு கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளது. மதிப்பீடு பணி அக்.,31க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது புதிய வழிகாட்டுதல் மதிப்பு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் நவ.,1 முதல் புதிய வழிகாட்டுதல் மதிப்பின்படி, பத்திரப்பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்படும். பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போதுள்ளதை விட கட்டணம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us