ADDED : ஜன 19, 2026 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு 2,000 ரூபாய்; ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் உள்ளிட்ட ஐந்து அறிவிப்புகளை கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாத அமைச்சர் ரகுபதி, 'தி.மு.க., அரசு திட்டங்களைத்தான், 'காப்பி பேஸ்ட்'டாக்கி, தன் அறிவிப்பாக பழனிசாமி வெளியிட்டுள்ளார். இப்படி பரிதாப நிலைக்கு பழனிசாமி தள்ளப்பட்டிருப்பது வேதனை' என கிண்டலாக கூறியுள்ளார்.
ஆனால், ரகுபதியே, அ.தி.மு.க., வாயிலாக வளர்ந்தவர்; வளமானவர். அவரே, அ.தி.மு.க.,வின் செராக்ஸ் காப்பியாகத்தான் தி.மு.க.,வுக்கு சென்றுள்ளார். செராக்ஸ் காப்பியெல்லாம் 'காப்பி பேஸ்ட்' என விமர்சிக்க தகுதி இல்லை. வாய் இருக்கு என்பதற்காக, இஷ்டத்துக்கும் வடை சுடக்கூடாது.
- இன்பதுரை, எம்.பி., - அ.தி.மு.க.,

