ADDED : செப் 22, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல மாநிலங்களோடு ஆலோசித்து, மக்களின் சுமையை குறைக்க, ஜி.எஸ்.டி.,யை இரண்டு விதமாக மாற்றி அமைத்திருப்பதை, மக்கள் வரவேற்கின்றனர். ஜி.எஸ்.டி., குறைப்பு என்பது, அனைத்து தரப்பு மக்களுக்கும், சேமிப்பை ஏற்படுத்தும்.
தமிழக அரசு கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். மத்திய அரசின் கல்விக் கொள்கையை, பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு, சிறந்து விளங்குகின்றன. கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசுடன், தமிழக கல்வித்துறை இணைந்து செயல்பட வேண்டும். எந்த மொழியையும், எந்த அரசும் திணிக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. புதிய மொழி கற்பதிலும் தவறு கிடையாது.
தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
- வாசன்,