sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுகவின் பாவ மூட்டையை சுமக்காதீர்கள்: திருமாவுக்கு இபிஎஸ் அட்வைஸ்

/

திமுகவின் பாவ மூட்டையை சுமக்காதீர்கள்: திருமாவுக்கு இபிஎஸ் அட்வைஸ்

திமுகவின் பாவ மூட்டையை சுமக்காதீர்கள்: திருமாவுக்கு இபிஎஸ் அட்வைஸ்

திமுகவின் பாவ மூட்டையை சுமக்காதீர்கள்: திருமாவுக்கு இபிஎஸ் அட்வைஸ்

1


ADDED : ஆக 16, 2025 09:17 PM

Google News

1

ADDED : ஆக 16, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: சேரக்கூடாத இடத்தில் போய் சேர்ந்துவிட்டதாலும், வேறு வழியில்லை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரே காரணத்தினாலும், திமுக சொல்வதை திருமாவளவன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பஸ் ஸ்டாப் அருகே கூடியிருந்த மக்களிடம் இபிஎஸ் பேசியதாவது; சட்டசபை தேர்தலுக்கு முன் ஸ்டாலின் 525 அறிவிப்புகள் வெளியிட்டார், எதையும் நிறைவேற்றவில்லை. இந்த உண்மையைச் சொன்னால் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று திருமாவளவன் சொல்கிறார், நாங்கள் அரசியல் செய்யவில்லை, நடப்பதையே சொல்கிறோம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உறுதி கொடுக்கிறார். அவர்கள் கொடுத்த பட்டியலைப் பெற்றுக்கொண்டு உறுதி கொடுத்தார்.

அதன்படி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யுங்கள் என்று ஆணையாளருக்குக் கடிதம் எழுதினார். இவற்றை எல்லாம் செய்து வாக்குகளை வாங்கிவிட்டு கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார். தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்து மண்டபங்களில் அடைத்தார். இதற்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திருமா அவர்களே, திமுக செய்கின்ற பாவ மூட்டையை சுமக்காதீர்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மக்களை நேரடியாக சந்தித்த திருமாவளவன் மதுவை ஒழிக்க மாநாடு நடத்துவேன் என்று அறிவித்தார். அதன் பிறகு அந்த போராட்டத்தை போதை ஒழிப்பு மாநாடு என்று பெயர் மாற்றிவிட்டார். திமுக கொடுத்த நெருக்கடியில் பெயரை மாற்றியது மட்டுமில்லாமல் திமுக நிர்வாகிகளை மேடையேற்றி பேச வைக்கிறார். திருடன் கையில் சாவி கொடுத்த மாதிரி. நடந்துகொண்டார்.

பாவம்


பாவம் திருமாவளவன், சேரக்கூடாத இடத்தில் போய் சேர்ந்துவிட்டார். வேறு வழியில்லை கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரே காரணத்தினால் திமுக சொல்வதை அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். திருமா அவர்களே, உங்களுக்கு என மரியாதை இருக்கிறது. திமுக செய்யும் தவறை எல்லாம் நீங்கள் சுமந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டால் உங்கள் நிலை தலைகீழாக மாறிவிடும் என்று அன்போடு சொல்கிறேன்.

திமுக அரசு சமூக நீதி பேசுகிறார்கள். ஆனால், அப்படி நடப்பதில்லை. அண்மையில் சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் அரசு விழா நடந்தது. அதில் மேட்டூர் நகர்மன்றத் துணை தலைவரை நாற்காலியில் அமரவைத்தனர். ஆனால், மேட்டூர் நகர்மன்ற தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், இவரை நிற்க வைத்தனர். (போட்டோவை மக்களிடம் காட்டுகிறார்). இவர் தான் சமூகநீதியைக் காப்பாற்றுகிறாராம். இதற்கு திருமா வரிந்துகட்டி பேசிக்கொண்டிருக்கிறார். இனியாவது திருமா உணர்ந்து அதற்குத்தக்க நடந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் உத்தமரா?


அரசு பணத்தில் உதயநிதி கார் பந்தயம் நடத்தினார், ஸ்டாலின் கடலில் பேனா வைக்கிறார். எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன? நடுக்கடலில் 82 கோடியில் ஏன் வைக்க வேண்டும்? எழுதும் பேனாவை மாணவர்களுக்குக் கொடுங்கள், அவர்கள் பாராட்டுவார்கள். திமுக ட்ரஸ்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. அந்த பணத்தில் வையுங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அரசியல் கட்சிகளிலேயே டிரஸ்ட்டில் அதிக பணம் வைத்துள்ள ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்.

ஊழல் என்றாலே திமுகதான். இன்று கூட ஒரு மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. (மக்கள் அமைச்சர் பெயரைச் சொல்கிறார்கள். நீங்களே பெயர் சொல்லிவிட்டீர்கள். நான் அவர் பெயரைச் சொன்னால் திமுக கூட்டணிக்காரர்களை வைத்து பேச வைப்பார்கள். ஏனென்றால் திமுகவால் பேச முடியாது. சரக்கு இருந்தால்தானே பேச முடியும்? ரெய்டு நேரத்தில் ஒரு அலுவலகத்தை சோதனை செய்துவிடக்கூடாது என்று பூட்டி வைத்துவிட்டனர். நீங்கள் உத்தமர் என்றால் திறந்துவிடுங்கள், என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..?

நானே தூசுதட்டித் தருகிறேன்


மடியிலே கனம் இருப்பதால் வழியிலே பயம் பிடித்துவிட்டது. அதனால்தான் பூட்டி வைத்தனர். நான் முதல்வராக இருந்தபோது என் மீது ஊழல் வழக்கு போட்டார்கள், வழக்கு போட்டவரே திரும்பப்பெறுவதாகச் சொல்லியும், நான் வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் டிஸ்மிஸ் செய்துவிட்டனர். இப்போது என் மீதான வழக்கை தூசுதட்டி எடுப்போம் என்று என் மீது கேஸ் போட்டவர் சொல்கிறார், நானே தூசுதட்டித் தருகிறேன். நீங்கள் போய் வழக்குப்போடுங்கள். தூசு தட்டவேண்டிய நேரம் வரும் 2026ல் அப்போது யார் யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அனைவரும் இருப்பார்கள்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.






      Dinamalar
      Follow us