sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்!: மாணிக்கம் தாகூர்

/

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்!: மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்!: மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்!: மாணிக்கம் தாகூர்


UPDATED : ஜன 01, 2026 03:11 AM

ADDED : ஜன 01, 2026 01:48 AM

Google News

UPDATED : ஜன 01, 2026 03:11 AM ADDED : ஜன 01, 2026 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'த.வெ.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியை நீக்க வேண்டும்' என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், 'காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்' என, அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாக, டில்லியில் தி.மு.க., - எம்.பி., புகார் சொன்னதால், காங்., - எம்.பி., ராகுல் 'அப்செட்' அடைந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு, லோக்சபா தொகுதிக்கு ஒன்று என்ற வீதத்தில் 39 சட்டசபை தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., 'சீட்' உள்ளிட்ட நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளது.

திட்டவட்டம்


அதற்கு மொத்தம் 25 தொகுதிகளும், தற்போது காங்கிரஸ் வென்றுள்ள தொகுதிகளில் ஏழு மட்டுமே மீண்டும் தரப்படும் என்றும், தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., கொடுத்துள்ள தொகுதி பட்டியல், காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்காமல், அவர் அப்பட்டியலை கிடப்பில் போட்டுள்ளார்.

இதற்கிடையில், த.வெ.க., தலைவர் விஜயை, சென்னையில் அவரது வீட்டில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தொலைபேசியில் விஜயுடன் பேசிய தகவலும் வெளியானது.

'ஆட்சியில் பங்கு தரவில்லை என்றால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரும் ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

இதெல்லாம், தி.மு.க., மேலிடத்தை அதிர வைத்துள்ள நிலையில், 'உ.பி.,யை விட தமிழகம் அதிக கடன் வாங்கும் மாநிலமாக திகழ்கிறது' என, சமூக வலைதளங்களில் பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டார். அப்பதிவுக்கு, தி.மு.க., அமைச்சர்களும், எம்.பி.,க்களும் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தனர்.

பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூட்டணியில் உள்ள வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தின.

அடிப்படை கேள்வி


தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி விமர்சிப்பதை விரும்பாத காங்கிரஸ் மேலிடம், தங்கள் உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி மேலிட அனுமதியுடன், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவு:

வி.சி., - ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலிடம், காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியதை அறிந்தேன்; இது, ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

அதாவது, காங்கிரஸ் தன் உட்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என, கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் துவங்கியது எப்போது?

பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கூட்டணிகள் உருவாகின்றன; பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடகங்கள் வாயிலாக அல்லாமல், கூட்டணி மேடை களுக்குள் பேச வேண்டும். தங்களது உட்கட்சி விஷயங்களில், இதுபோன்ற பொதுக் கருத்துக்களை, அந்த கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா?

வி.சி., ரவிகுமார், ம.தி.மு.க., துரை வைகோ, மார்க்சிஸ்ட் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் ஆகியோரிடம், 'உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படி சமாளியுங்கள்' என தமிழக காங்கிரஸ் தலைமை சொன்னால், அவர்கள் அதை சகித்துக் கொள்வரா?

பலவீனம்


ஒரு கூட்டணி கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது, ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு களுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைமைகள், தங்களது மாநிலச் செயலர்களிடம், குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல வைகோ, திருமாவளவன் ஆகியோரும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில், 'லட்சுமண ரேகை'யை மதித்து, தங்களது எம்.பி.,க்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஒற்றுமை என்பதன் அர்த்தம் மவுனம் அல்ல; அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே தவிர, அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் அலட்சியம்


'பிரவீன் சக்கரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்த திருச்சி வேலுசாமியை, கட்சியில் இருந்து நீக்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம், தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டி புகார் செய்து உள்ளது.

மேலும், ராகுலை சந்தித்த தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவரும், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதற்கு, எந்த பதிலும் சொல்லாமல், 'பார்க்கலாம்' என அலட்சியமாக ராகுல் சொன்ன பதில், தி.மு.க., தலைமையை கவலை அடைய செய்து உள்ளது.

பெரிதுபடுத்த வேண்டாம்


எங்கள் கட்சி பிரச்னையை, நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பா.ஜ.,வுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால், அப்புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். இது குறித்து, தலைமை நடவடிக்கை எடுக்கும் என முழுமையாக நம்புகிறோம். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும், உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம். கூட்டணி கட்சிகள், இதை விட்டு விட வேண்டும்; பெரிதுபடுத்த வேண்டாம். - செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்கிரஸ்



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us