என் பேச்சை கேக்கலைன்னா; ரத்தம் கக்கி சாவீங்க!: செல்லூர் ராஜூ சாபத்தால் தொண்டர்கள் பீதி
என் பேச்சை கேக்கலைன்னா; ரத்தம் கக்கி சாவீங்க!: செல்லூர் ராஜூ சாபத்தால் தொண்டர்கள் பீதி
ADDED : மார் 27, 2024 05:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: என் பேச்சை கேக்கலைன்னா, ரத்தம் கக்கி சாவீங்க என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய பேச்சால் தொண்டர்கள் பீதி அடைந்தனர்.
கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது: நான் பேச துவங்குகிறேன், இடையில யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்து போகக்கூடாது. போனா ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டு தான் கூட்டத்திற்கு வந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
செல்லூர் ராஜூ ரத்தம் கக்கி சாவீங்க என சொல்லி விட்டு மேடையில் சிரித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு சில நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தனர்.

