ADDED : நவ 16, 2025 12:47 AM
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தொழில் துறை முதலீடுகள், பரவலாக்கப்பட்ட வளர்ச்சி குறித்து, எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல், குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி நோக்கத்திற்கு, உதவாத முதலீடுகளுக்கு, நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஏனெனில், அதே இடத்தில் பல நிறுவனங்கள், பல திட்டங்களுடன், ஒவ்வொரு நாளும் முதல்வர் அலுவலகத்தை நாடுகின்றன. தி.மு.க., ஆட்சியில், கையெழுத்திடப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 சதவீதத்திற்கும் மேலான ஒப்பந்தங்கள், உறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழக நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, அரைகுறை தகவல்களை, தன் எஜமான கட்சியின் அதிகாரம் இழந்த பிரதிநிதி பேசிவிட்டார் என்பதற்காக, போட்டிக்காக அவர் சொன்ன பொய்யை வெளியிடுவது, எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல.
இதுவே, கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில் துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான, தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம்.
- ராஜா
தமிழக தொழில் துறை அமைச்சர் , தி.மு .க.,

