ADDED : டிச 09, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'சாலை ஆய்வாளர் பதவி முடிவுகள் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., வேண்டுகோள் விடுத்து உள்ளது.
'சாலை ஆய்வாளர் பதவிக்கு தேர்வெழுதிய, இன்ஜினியர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வெழுத அனுமதித்து விட்டு, முடிவுகளை வெளியிடாததில் மோசடி நடந்துள்ளது' என, இன்ஜினியர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.
அதனால், டி.என்.பி.எஸ்.சி., அளித்துள்ள விளக்கம்: உயர் நீதிமன்றம் ஆகஸ்ட், 13ல் வெளியிட்ட தீர்ப்பின்படி, சாலை ஆய்வாளர் பதவிக்கான கல்வித்தகுதி மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கேற்ப தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதனால், டி.என்.பி.எஸ்.சி., மீதுள்ள நம்பிக்கையை குறைக்கும் வகையில், யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.