தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்றாதீர்கள்: பெருமாள் முருகன்

பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்றாதீர்கள்: பெருமாள் முருகன்

பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்றாதீர்கள்: பெருமாள் முருகன்

18


ADDED : நவ 17, 2026 08:56 AM

Follow on GoogleFavourite on Google

18

ADDED : நவ 17, 2026 08:56 AM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

கோவை ஈவெரா நூலக ஊழலை அம்பலப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நூலகங்களில் ஏற்கனவே சில முறைகேடுகள் இருந்தன; உதாரணமாக, அரசுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை வேறு தலைப்புகளில் மறுபதிப்பு செய்வது. ஆசிரியர்களின் பெயர்களை மாற்றி புதிய பதிப்புகள் போலக் காட்டுவது போன்றவை. அவற்றில் ஏதோ ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த ஏஐ புத்தகங்கள் எந்த அளவுக்கு மோசமானவை என்றால், அவை பார்ப்பதற்கு மட்டுமே புத்தகங்கள் போல இருந்தன. அவற்றில் எந்தத் தகவலோ, உண்மைகளோ, உண்மையான ஆசிரியரோ கிடையாது. விலைகளும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஏஐ புத்தகங்களைக் கண்டறிந்து, அனைத்து பொது நூலகங்களின் அலமாரிகளிலிருந்தும் அகற்ற வேண்டும். வழக்கு முடியும் வரை அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் பிறகு அவற்றை அழித்துவிட வேண்டும். இவற்றில் நம்பகமான தகவல்கள் ஏதுமில்லை என்பதால், எவரும் இதைப் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் பங்களிக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு புதிய புத்தகமும் வாசகர்களால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்; அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே, அந்தப் புத்தகங்கள் அலமாரிகளில் வைக்கப்பட வேண்டும். தரம் குறைந்த புத்தகங்களை வெளியீட்டாளர்களிடமே திருப்பி அனுப்பிவிடலாம். கேரளாவில், ஒவ்வொரு நூலகமும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை உள்ளடக்கிய உள்ளூர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இக்குழுக்கள் புத்தகங்களை மதிப்பாய்வு செய்கின்றன.

இலக்கியக் கூட்டங்களை நடத்துகின்றன. வாசகர்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குகின்றன. நம் நூலகங்களிலும் இத்தகைய குழுக்களை அமைப்பதன் மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. கட்டட வடிவமைப்பை மட்டும் அப்படியே நகலெடுத்தால் போதாது. சிங்கப்பூரில், ஒரு வாசகர் கேட்கும் புத்தகம் ஒரு நூலகத்தில் இல்லையென்றால், பணியாளர்கள் பிற நூலகங்களில் தேடி, அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து வாசகரிடம் ஒப்படைக்கிறார்கள்.

அங்கு புத்தகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் ஊர்களில், குறிப்பாக கிராமப்புற நூலகங்களில் வாசகர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட புத்தகம் நூலகத்தில் உள்ளதா இல்லையா என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கும் முறையே இங்கு இல்லை. தற்போதைய நூலகப் பயனர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், அரசுத் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் முதியவர்களே ஆவர்.

நூலகங்கள் சந்தா செலுத்திப் பெறும் இதழ்கள் மற்றும் செய்தித்தாள்கள் முறையாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும். பல இதழ்களும் புத்தகங்களும் நூலகங்களுக்காக மட்டுமே அச்சிடப்படுகின்றன; தரம் இல்லாததால் அவை எவராலும் வாசிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. நூலகம் என்பது குப்பை கொட்டும் இடம் அல்ல. பொது நூலகங்களை குப்பை மேடுகளாக மாற்ற கூடாது. இவ்வாறு எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us