தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/இரட்டை இலை சின்னம்: வழக்கு

இரட்டை இலை சின்னம்: வழக்கு

இரட்டை இலை சின்னம்: வழக்கு


ADDED : பிப் 29, 2024 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்ற புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனு:

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், கட்சி சட்ட விதிகளுக்கு செயல்பட்டது தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன்.

உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும்வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என, நான் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us