ADDED : பிப் 05, 2025 07:23 PM
'பிப்.,2 ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாளாக இருந்தாலும், சுப மூகூர்த்த நாளாக இருந்ததால், அன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்' என, தி.மு.க., அறிவித்தது. இதை நம்பி ஏராளமானோர், சார் பதிவாளர் அலுவலகம் சென்றனர். ஆனால், பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கவில்லை. இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல், ஒருவித அதிருப்தியுடன் வீடு திரும்பியுள்ளனர்.
ஒரு துறைக்கு உள்ளேயே, ஒருங்கிணைப்பு ஏற்படுத்தாததன் காரணமாக பாதிக்கப்பட்டது பொதுமக்களே. அன்று பத்திரப்பதிவு அலுவலகம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்கு, இரட்டிப்பு செலவை, தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நல்ல நாளில் பத்திரப்பதிவை மேற்கொள்ள முடியவில்லை என்ற மன உளைச்சலையும், தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிறிய அறிவிப்பை கூட, தி.மு.க., அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்