தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பூட்டியிருந்த 4 வீடுகளில் டவுசர் கொள்ளையர் கைவரிசை

பூட்டியிருந்த 4 வீடுகளில் டவுசர் கொள்ளையர் கைவரிசை

பூட்டியிருந்த 4 வீடுகளில் டவுசர் கொள்ளையர் கைவரிசை


UPDATED : நவ 12, 2026 07:57 PM

ADDED : நவ 12, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:57 PM ADDED : நவ 12, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்: புதுப்பாளையம் சுற்று வட்டார பகுதியில், இரவு நேரத்தில் டவுசர் கொள்ளையர்கள் பூட்டியிருந்த வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளது, அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்த புதுப்பாளையம், புளியங்காடு பகுதியில் நேற்று (நவ.,11) நள்ளிரவு, டவுசர் அணிந்து கொண்டு, கையில் ஆயுதங்களுடன் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் சிலர், பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

மேலும், பீரோவை திறந்து அதிலிருந்த துணிகளை துாக்கி வீசி, நகை, பணம் ஏதாவது உள்ளதா என, தேடியுள்ளனர். எதுவுமே கிடைக்காததால், கையில் கிடைத்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து, ஓம்சக்தி நகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைக்கும் போது, அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பினர். பின்னர், வாய்க்கால் மேடு பகுதியில், பூட்டியிருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கிடைத்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு விசைத்தறி கூடத்திற்கு தொடர் விடுமுறை என்பதால், பலர் வெளியூர்களுக்கும், சுற்றுலாவுக்கு சென்று விட்டனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு திருட வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்து பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, டவுசர் அணிந்த மர்ம நபர்கள் திருட முயன்றதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சில மாதங்களாக, இரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us