மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகள் கட்டுப்பாடு வரைவு விதி வெளியீடு
மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகள் கட்டுப்பாடு வரைவு விதி வெளியீடு
UPDATED : நவ 17, 2026 07:39 PM
ADDED : நவ 17, 2026 07:36 PM
சென்னை: மருத்துவம் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளுக்காக, விலங்குகளை பயன்படுத்துவதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய, வரைவு விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சிக்காக, விலங்குகளை இனப்பெருக்கம் செய்தல், பராமரித்தல் மற்றும் பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவதை கண்காணித்து, ஒழுங்கு முறைப்படுத்த, வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆய்வக விலங்குகளை இனப்பெருக்கம் செய்வோர், வர்த்தகம் செய்வோர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினர் அனைவரும், ‘விலங்குகள் பரிசோதனை கண்காணிப்பு குழு’ இணையதளத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தெருவோர பிராணிகளை, சோதனைகளுக்கு பயன்படுத்துவதில், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே, அந்த விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும். எனவே, அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களும், இந்த வரைவு விதிகளை கவனமாக அறிந்து, தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் அல்லது ஆட்சேபனைகளை நேரடியாக, விலங்குகள் பரிசோதனை கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
