இந்தியாவிலே சிறந்தது தமிழக கல்வி முறை: சொல்றது யாருன்னு பாருங்க!
இந்தியாவிலே சிறந்தது தமிழக கல்வி முறை: சொல்றது யாருன்னு பாருங்க!
ADDED : செப் 05, 2024 12:17 PM

சென்னை: 'இந்தியாவிலே சிறந்தது தமிழகத்தின் கல்வி முறை தான்' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
சென்னை, வண்டலூரில் நடந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இந்தியாவிலே சிறந்தது நமது கல்வி முறை தான். தமிழக கல்விமுறையின் சிறப்பை மாணவர்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். தமிழக கல்விமுறை சரி இல்லை என்று சிலர் அவதூறு பரப்புகிறார்கள். சிலர் குறை சொல்வதை என்னால் ஏற்க முடியாது. மயில்சாமி அண்ணாதுரை, முத்துவேல் போன்றோர் அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆகினர்.
கல்வி முறை
தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். நமது கல்விமுறையை விமர்சிப்பது நமது மாணவர்களையும், ஆசிரியர்களையும் அவமதிப்பதற்கு சமம். இதற்கு நமது முதல்வரும், திராவிடமாடல் அரசும் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழகத்தின் கல்வி முறை தான் மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. தமிழகத்தின் கல்வி முறையை குறை சொல்பவர்களை ஆசிரியர்களை மன்னிக்க மாட்டார்கள். தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளனர்.
அக்கறை
முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர்களின் நலன்களின் கவனம் செலுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். உயர்கல்வி படிக்கும் அத்தனை பேருக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே காரணம். ஆசிரியர்கள் மீது எப்போதுமே தி.மு.க.,வுக்கு அக்கறை உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.