sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

/

தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

4


UPDATED : ஜூன் 14, 2025 10:48 PM

ADDED : ஜூன் 14, 2025 10:08 PM

Google News

UPDATED : ஜூன் 14, 2025 10:48 PM ADDED : ஜூன் 14, 2025 10:08 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: '' திராவிடத்தின் ஒரே சாதனை தமிழை ஒழித்தது தான்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருச்செந்தூரில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற வரலாற்று உண்மையை ஏற்க மறுத்த கன்னடர்கள் கிளர்ந்து எழுந்தனர். தமிழை இழிவுபடுத்தி பேசினர். ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் ஆதரவாக இங்கு ஒருவர் கூட கருத்து எழுப்பவில்லை. கன்னடர் கருத்தை கண்டித்து பேசவில்லை என்பது, கர்நாடகாவில் கன்னடர்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள். தமிழர்கள் அப்படி இல்லை என்பதை நிரூபித்து காட்டியது.

உயிர்

மொழிப்போர் மறவர்கள் நம் முன்னவர்கள். அப்போது ஏற்பட்ட மொழி புரட்சியில் அதிகாரத்திற்கு வந்தவர்கள் திராவிடர்கள். அந்த அரியணையில் அமர்ந்த உடன் முடிவெடுத்தார்கள். தமிழனுக்கு உயிர் உடலில் இல்லை. மொழியில் இருக்கிறது. தமிழுக்கு, தமிழனுக்கு உயிர் மொழியில் இருக்கிறது. இதனை அழிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முன்னோர்கள் சொன்னார்கள்.

சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முதல்வர் சொன்னார். ஆனால், அது முற்றுப்பெறவில்லை. எங்கும் தமிழ். எதிலும் தமிழ். இனி இருக்காது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. திராவிடர்களின் கோட்பாடு. இனிஇருக்காது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.

ஈ.வெ.ராமசாமி தமிழில் பெயர் வைப்பது பழமை என்றார். தமிழில் எழுதுவது, பேசுவது படிப்பது எல்லாம் பத்தாம் பசலித்தனம். தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா?, சோறு கிடைக்குமா? தமிழில் படித்தால் பிச்சைகூட எடுக்க முடியாது என சொன்னவர் ஈ.வெ.ராமசாமி. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்கள். தமிழ் முட்டாள்களின் பாஷை என்றார்கள். இதனை சொன்னவரை தமிழரின் தலைவன் என்றார்கள்.


சிவனும் தமிழும் வேறு இல்லை. முருகனும் தமிழம் வேறு இல்லை.தமிழ் கடவுள் முருகன். தமிழே முருகன் தான்.

சிறந்த மொழி2026 தேர்தலில் திராவிடனுக்கு தலைமுழுக்கு செய்யவில்லை என்றால் நாம் வாழ்ந்து பயனில்லை. இவர்களை போன்று பொய் பிரட்டுகளை கட்டமைத்தவர்கள் உண்டா. கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன தொடர்பு. சில மொழிகள் பிறந்து சிறக்கும். சிறந்து பிறந்த மொழி தமிழ்.

திராவிடர்கள் சாதித்தது ஒன்றே ஒன்று தான். அவர்களின் சாதி ஒழிப்பு ஹம்பக். சமூக நீதி வெட்டிப்பொய். பெண்ணிய உரிமை ஏமாற்று வேலை. எல்லாமே ஏமாற்று. அவர்களின் ஒரே சாதனை தமிழை ஒழித்தது தான். தமிழை ஆங்கிலம் கலந்து பேசி அழித்தான். தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இந்த நிலையை மாற்றாத வரை உறக்கமில்லை என்ற உறுதியை ஏற்க வேண்டும்.



ஒடிசாவில் தமிழனை ஆட்சி செய்ய விடுவதா என கேட்டார்கள். இங்கு வந்து தமிழ் தமிழ் என பேசுகிறார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.






      Dinamalar
      Follow us