தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கடற்கரையை கல்லறையாக்கும் திராவிடம்: சீமான்

கடற்கரையை கல்லறையாக்கும் திராவிடம்: சீமான்

கடற்கரையை கல்லறையாக்கும் திராவிடம்: சீமான்


UPDATED : நவ 11, 2024 02:45 PM

ADDED : நவ 11, 2024 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2024 02:45 PM ADDED : நவ 11, 2024 02:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூத்துக்குடி: 'வசதியாகத் திருடவும், பதுங்கியிருக்கவும் கொண்டுவந்தது தான் திராவிடம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: எந்த குழப்பமும் இல்லை. நான் தமிழ் மகன். என் தேசம் தமிழ் தேசம். என் அரசியல் தமிழ் தேச அரசியல். நான் அதில் பாதி, இதில் பாதி கிடையாது. என் தேசம் இது. நாடு தமிழ்நாடு; அப்படி என்றால் தேசம் தமிழ் தேசம் தான். இங்கு வாழ்கின்ற மக்கள், அவர்களுடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, கனிம வளம், நீர்வளம் இவற்றை காக்க வேண்டும்.

பெண்களுக்கு உரிமை, எல்லோருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம் என இதைக் கொண்டு பெருமை மிக்க வாழ்வு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது எல்லாம் கொண்டு ஒரு அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் தமிழ் தேச அரசியல்.

திராவிடம் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? சொல்லச் சொல்லுங்கள். திராவிடம், தமிழ் தேசம் என்ற குழப்பம் எல்லாம், யாருடனாவது கூட்டணி வைத்து நிற்பதற்கு பயன்படும். இது ஒரு போர். இந்தியம் என்பதும் திராவிடம் என்பதும் கற்பிதம். இந்தியா என்கிற ஒரு நாட்டை உருவாக்கியது யார்? வெள்ளைக்காரன்.

பெயர் வைத்தது யார்? வெளைக்காரன் துப்பாக்கி முனையில் இந்தியா என சொல்ல வைத்தான். உயிரா, உரிமையா என்று கேட்டதற்கு உயிர் என்று சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரன் பெத்து, பெயர் வைத்துவிட்டு சென்றதற்கு இவர்கள் அப்பன் முறை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். அது தான் இந்த திராவிடம். வசதியாக திருடுவதற்கு, பதுங்கி இருப்பதற்கு கொண்டு வந்தது தான் திராவிடம். திராவிடம் என்பது இனம், இடம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.

கடைசியில் தமிழ்தேசமும், திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள். அது எப்படி கொலைகாரனும், செத்து விழுகிறவனும் ஒன்றாக இருப்பார்கள். நான் எங்க அப்பன் செத்தால் உளமாற அழுவேன். நீ ஒப்புக்கு அழுவாய். நீயும் நானும் ஒன்றா? தமிழ்தேசம் கடற்கரையை கடற்கரையாக பார்க்கும். திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us