'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு
'இன்ஸ்டா'வில் பழகிய மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் தலைமறைவு
ADDED : பிப் 17, 2025 07:50 AM
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சத்தியமூர்த்தி 22; இவர் 13 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன் லாவகமாக பேசி மாணவியை நேரில் வரவழைத்துள்ளார்.
அவரை நம்பி சென்ற மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி உள்ளார். பயந்து போன மாணவியும், தான் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அவரை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது சத்தியமூர்த்தி தன்னை பலாத்காரம் செய்த விபரத்தை தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் சத்தியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.