ராணுவத்துக்கு உதவும் டிரோன்கள்: சென்னையில் அமைகிறது தயாரிப்பு நிறுவனம்
ராணுவத்துக்கு உதவும் டிரோன்கள்: சென்னையில் அமைகிறது தயாரிப்பு நிறுவனம்
ADDED : செப் 21, 2024 09:57 PM

சென்னை: டிரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ், ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற டிரோன் உற்பத்தி வசதியை சென்னையில் அமைக்கிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேச்சு நடத்தியுள்ளது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்.
இது குறித்து கருடா ஏரோபேஸ் நிறுவனத்தின் சிஇஓ., அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
ஹச்ஏஎல் மற்றும் பிஇஎம்எல் ஆலோசனைப்படி, டிரோன் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை செய்யும் இடங்கள் அமையும். டிரோன் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றம் டிரான்ஸ்மீட்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் கொண்ட டிரோன்களையும் உற்பத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசுடன் முதற்கட்ட பேச்சு நடத்தியிருக்கிறோம். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எங்களது மேலான வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேக் இந்தியா திட்டம் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் படி செயல்படுத்த இருக்கின்றோம்.
வெளிநாட்டு கம்பெனியான இஸ்ரோ அக்ரோவிங், கிரீஸ் நாட்டை தலைமையகமாக கொண்ட ஸ்பிரிட் ஏரோனாட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தவும் ஆலோசித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.