ADDED : நவ 23, 2026 06:58 PM
காவிரி டெல்டா மாவட்டங்களில், 7 லட்சம் ஏக்கர் பரப்பில், சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள், தண்ணீரின்றி கருகி வருகின்றன. பொய்த்து போன பருவமழை, வறட்சி, அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத் தட்டுப்பாடு என, பல சவால்களை தாண்டி விளைவித்த நெற்பயிர்கள், தண்ணீரின்றி காய்கின்றன. இதுபற்றி முறையிட்டால், ஸ்பிரே மற்றும் டானிக்கை தெளியுங்கள் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அணுகுமுறை, விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற சொல்வதாகவே இருக்கிறது.
கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டு பெற முடியவில்லை; மேகதாது அணை கட்டும் முயற்சியையும் தடுக்கவில்லை; டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவும் முன்வரவில்லை. இதுதான் த.வெ.க., அரசு கூறிய மாற்றமா?
விவசாயிகளை மேலும் துயரப்படுத்தாமல், காவிரி டெல்டா மாவட்டங்களை, வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும், உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும்.
– தினகரன்
பொதுச்செயலர், அ.ம.மு.க.,
