போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் ரூ.55 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் ரூ.55 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்
ADDED : செப் 05, 2024 05:44 PM

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். அதில் ஜேஎம்சி ரெசிடென்சி, சொகுசு பங்களா மற்றும் ஜாகுவார், ரெிசிடிஸ் உள்ளிட்ட 7 சொகுசு கார்களும் அடக்கம்.