ADDED : மார் 08, 2026 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: போதைப்பொருள் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல் அடிப்படையில், டில்லி மோதி நகரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த சர்தக் தியாகி,30, கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அசோக் விஹாரில் பதுங்கியிருந்த குல்பிரீத் சிங் என்ற சன்னி,29, கைது செய்யப்பட்டார்.
இருவரிடம் இருந்து,1.016 கிலோ கஞ்சா, 1.112 கிலோ சரஸ், 17 கிராம் எம்.டி.எம்.ஏ., ஒரு கிராம் எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 4 கிராம் போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் என போலீசார் கூறினர்.

