ADDED : பிப் 08, 2026 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 13ம் தேதி வரை, வறண்ட வானிலையே நீடிக்கும்.
நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 11ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

