sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

/

உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்

12


ADDED : ஜூலை 19, 2025 09:03 AM

Google News

12

ADDED : ஜூலை 19, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை; எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் இன்று காலை அலுவலகம் செல்லும் வழியில் நிருபர்கள் அவரை மறித்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சுந்தரேசன் அளித்த பதில்கள் வருமாறு;

என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை டிரான்ஸ்பர் செய்கிறார்கள்.ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் . இதுதான் காவலர்களின் நிலை.ஒரு ஒரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர்.

நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன். போலீசார் நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள் குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை.

கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன்.தன்னை விசாரிக்காமல் எப்படி டி.ஐ.ஜி., சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.

மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா. நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். எனது தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்த செய்திகளை பார்த்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இது தொடர்பாக விடுமுறை கேட்டு செல்போனில் மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும்.இது தொடர்பான பிரச்னை டி.ஐ.ஜி.,க்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை.

11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை.டி.எஸ்.பி., விஷ்ணு பிரியா நாமக்கல்லில் மறைந்தார். அந்த வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒரு காவலராக இருந்தேன்.

அடுத்து விஜயகுமார் ஐ.பி.எஸ்., இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் தங்கம் என தெரிவித்தார் .தமிழக முதல்வர் ஏன் இன்னும் எனது பிரச்னையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டி.ஜி.பி., ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை.

நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்றக்கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் எனக்கு தெரியும்.

என் மீது ஏணியை தூக்கி அடிக்கிறீர்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும்.

காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம். எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்து விட்டு கண்ணீர் விட்டு சென்று விடுவீர்கள். ஆனால் நான் கடைசிவரை பிரச்னைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன்.

டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை தன்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை.மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு பேட்டியளித்த சுந்தரேசன் பின்னர் தமது அலுவலகப் பணிக்கு சென்றார்.






      Dinamalar
      Follow us