ADDED : ஜன 24, 2026 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபையில், அமைச்சர் துரைமுருகன் செய்ய வேண்டிய பணிகள், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டசபை முன்னவராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டசபையில் தன் துறை சார்பாக துரைமுருகன் செய்ய வேண்டிய பணிகள், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, துரைமுருகன் நேற்று கொண்டு வர வேண்டிய சட்ட மசோதாவை, அமைச்சர் வேலு அறிமுகம் செய்தார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய அரசு ஊழியர்கள் பிரச்னை, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றுக்கு துரைமுருகன் பாணியிலேயே வேலு பதில் அளித்தார்.

