தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
UPDATED : அக் 15, 2026 06:24 PM
ADDED : அக் 15, 2026 06:07 PM
சேலம்: தசரா பண்டிகை கூட்ட நெரிசலை குறைக்க, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பெங்களூரு – துாத்துக்குடி சிறப்பு ரயில், இன்று இரவு, 9:45க்கு புறப்பட்டு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியே, நாளை மதியம், 12:30 மணிக்கு துாத்துக்குடியை அடையும். நாளை அதிகாலை, 3:20 மணிக்கு சேலம் வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில், நாளை மதியம், 3:30க்கு கிளம்பி, ஞாயிறு அதிகாலை, 5:30க்கு பெங்களூருவை அடையும். நாளை இரவு, 9:45க்கு சேலம் வந்து செல்லும்.
அதேபோல் பெங்களூரு – கண்ணுார் சிறப்பு ரயில், இன்று நள்ளிரவு, 12:05க்கு பெங்களூருவில் புறப்பட்டு, பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, கோழிக்கோடு வழியே, நாளை மதியம், 2:00 மணிக்கு கண்ணுாரை அடையும். நாளை அதிகாலை, 5:07க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்கத்தில், கண்ணுார் – பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில், நாளை மாலை, 6:25 மணிக்கு கிளம்பி, ஞாயிறு காலை, 9:45க்கு பெங்களூருவை அடையும். ஞாயிறு அதிகாலை, 3:17க்கு சேலம் வந்து செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
