காது மடல் அறுவை சிகிச்சை : ஹோமியோபதி மருத்துவர் கைது
காது மடல் அறுவை சிகிச்சை : ஹோமியோபதி மருத்துவர் கைது
ADDED : மார் 06, 2026 09:23 PM

சென்னை: ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்த மும்பையை சேர்ந்த இன்ஸ்டா பெண் பிரபலம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பூனம் சர்மா(54). இவர் ஹோமியோபதி படித்தவர். மும்பை நரிமன் பாயிண்ட் என்ற இடத்தில் இவருக்கு ஹோமியோபதி கிளினிக் உள்ளது.
இவர் சென்னை நுங்கம்பாக்கம்-கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அலோபதி கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார். காது மடல்களில் காதணி அணியும் இடத்தில் ஏற்படும் பெரிய துளைகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதாக தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இன்ஸ்டாவில் பிரபலம் என்பதால் இவரை 10,000 பேர் பின்தொடர்கின்றனர்.
இந் நிலையில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்திய போது பூனம் சர்மா சிக்கினார். ஹோட்டலில் அறை ஒன்றில் காது மடல் அறுவை சிகிச்சை செய்யும் வகையிலான ஏற்பாடுகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்.
விசாரணையில் அவர் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி சிகிச்சை முறையை கையாண்டது தெரிய வந்தது. அவரையும், உதவியாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூனம் சர்மா, காதுமடல்களை சரிசெய்வது தொடர்பான 800க்கும் மேற்பட்ட விடியோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளார். நாடு முழுவதும் 15க்கும் அதிகமான நகரங்களில் கிட்டத்தட்ட 5000 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் கூறி இருக்கிறார்.

