sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80 சதவீதம்

/

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80 சதவீதம்

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80 சதவீதம்

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80 சதவீதம்

2


UPDATED : பிப் 28, 2026 05:48 AM

ADDED : பிப் 28, 2026 04:12 AM

Google News

2

UPDATED : பிப் 28, 2026 05:48 AM ADDED : பிப் 28, 2026 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின், புதிய ஜி.டி.பி., கணக்கீட்டு முறையை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2022 - 23 நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண் டின் இரண்டாம் காலாண்டு வரையிலான ஜி.டி.பி., வளர்ச்சி விகிதங்கள், திருத்தி வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கணக்கீட்டு முறையின்படி, கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 7.40 சதவீதமாக இருந்தது.

கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த மதிப்பு கூட்டல் 7.80 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த நிதியாண்டுக்கு இது 7.70 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Image 1542008

ஏன் கால தாமதம்?


பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டி., கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகள் இதற்கு உகந்ததாக அமையவில்லை. இந்நிலையில் போதிய தரவுகள் கிடைக்கக்கூடிய, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் அதிகமில்லாத சாதாரண ஆண்டாக 2022 - 23 அமைந்திருப்பதால், இந்த ஆண்டு அடிப்படை ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்


*ஜி.எஸ்.டி., பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் இ - வாகன் போன்ற புதிய தரவுகள் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக அரசு செலவினங்கள், வாகன விற்பனை மற்றும் பெருநிறுவனங்களின் விபரங்கள் உடனுக்குடன் கிடைக்கும்

*முறைசாரா தொழில்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளின் பங்களிப்பை துல்லியமாக கணக்கிட, இவை சார்ந்த ஆண்டு ஆய்வுகள் நேரடியாக பயன்படுத்தப் படுகின்றன

* தனியார் இறுதி நுகர்வு செலவினம், உள்ளாட்சி அமைப்புகளின் தரவுகள், நிதி சேவைகள் மற்றும் மானியங்கள் ஆகியவை சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மிக துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளன.

*நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு 7.40 சதவீதத்திலிருந்து 7.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுImage 1542009

( அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி 7 - 7.40 சதவீதமாக இருக்கும் என கணிப்பு. பொருளாதார ஆய்வறிக்கையில் 6.80 - 7.20 சதவீதம் என மதிப்பிடப்பட்டிருந்தது






      Dinamalar
      Follow us