sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

/

அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

5


ADDED : ஏப் 11, 2025 07:39 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 07:39 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, கோவை மற்றும் திருச்சியில் அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் கட்டுமான நிறுவனம், அதன் ஊழியர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் இயக்குநரும், அமைச்சர் கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் தி.மு.க., எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

திருச்சி தில்லை நகரில் உளள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் பலமணி நேரம் சோதனை நடத்தினர். நேருவின் குடும்பத்தினர் காற்றாலை மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் அமலாக்கத்துறை எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சோதனையின் போது என்ன கைப்பற்றப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

சென்னை, திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் 2002ம் ஆண்டின் PMLA பணபரிமாற்ற சட்டத்தின் படி M/s Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் ஏப்.7ம் தேதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அந்த பதிவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத்துறை பதிவில், எந்த அரசியல்வாதியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, சோதனை என்று நடைபெற்றது, எந்த நிறுவனத்தில் நடைபெற்றது என்று அதன் பெயரையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us