ADDED : ஜூன் 28, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்க, அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி முன்பணம், 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க, அரசு சார்பில், 'கல்வி முன்பணம்' வழங்கப்படுகிறது.
இதுவரை தொழிற்கல்வி பயில அதிகபட்சமாக 50,000 ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இனி, தொழிற்கல்விக்கு 1 லட்சம் ரூபாய்; கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்க, 50,000 ரூபாய் வழங்கப்படும் என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதை செயல்படுத்த, தமிழக நிதித்துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் இது செயல்பாட்டிற்கு வரும்.