தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/27ல் கல்வி கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

27ல் கல்வி கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

27ல் கல்வி கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : அக் 25, 2026 06:28 AM

ADDED : அக் 25, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:28 AM ADDED : அக் 25, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் கலெக்டர் இளம்பகவத் அறிக்கை:

சேலம் மாவட்டத்துக்கு, 2026 - 27 கல்வி ஆண்டில், 7,592 மாணவ, மாணவியருக்கு, 130 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 - 26 கல்வி ஆண்டில், 6,347 மாணவர்களுக்கு, 111 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு இலக்கை எட்ட, கல்வி கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் கல்வி கடன் பெறுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மாணவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், முகாமில் பங்கேற்கலாம். முதல்கட்டமாக அக்., 27, காலை 10:00 மணிக்கு, அம்மாபேட்டை ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லுாரியில், கல்வி கடன் முகாம் நடக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற கல்லுாரி மாணவ, மாணவியரும் பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us