sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆஜர்

/

லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆஜர்

லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆஜர்

லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆஜர்


ADDED : ஆக 30, 2011 01:12 AM

Google News

ADDED : ஆக 30, 2011 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : நில மோசடி வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முன் ஜாமின் மனு, கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், லோக் ஆயுக்தா சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

நில மறு அறிவிப்பு மோசடி, ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில், கடந்த 27ம் தேதி ஆஜராகுமாறு, லோக் ஆயுக்தா கோர்ட், முதல்வர் எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. உடல் நிலையைக் காரணம் காட்டி, அவர் ஆஜராக வில்லை. இதனால், 29ம் தேதி பகல் 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், நில மறு அறிவிப்பு செய்த வழக்கில், தனக்கு முன் ஜாமின் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. எடியூரப்பா மீது வழக்கறிஞர்கள் சிராஜுதீன் பாஷா, பால்ராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஆஜராகுமாறு, லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவிட்டிருந்ததால், நேற்று பகல் 2.45 மணிக்கு, அவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகினர். விசாரணை துவங்கியது முதல் பகல் 3.30 மணி வரை, எடியூரப்பா உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நின்று கொண்டே இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றார். விசாரணைக்குப் பின்னர், சிராஜுதின், பால்ராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹனுமந்தராயா கூறுகையில், ''எடியூரப்பா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையை, செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம், இருதரப்பு வாதங்களையும் கேட்பார். அன்று விவாதம் முடியவில்லை என்றால், மேலும் விவாதம் தொடரும். அன்றைய தினமும் அனைவரும் ஆஜராக வேண்டும்,'' என்றார். இந்த வழக்கால், கோர்ட் பரபரப்பாக காணப்பட்டது. கோர்ட் வளாகம் முழுவதும் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us