உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 15, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் தினமும், எட்டு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு(நெக்) விலையை நிர்ணயம் செய்கிறது.
அதன்படி இன்று (நவ.,15), நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. இதில், முட்டை கொள்முதல் விலை, 25 காசு குறைத்து, 600 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 690, ஐதராபாத், 620, விஜயவாடா, 620, பர்வாலா, 628, மும்பை, 700, மைசூரு, 680, பெங்களூரு, 680, கொல்கட்டா, 680, டில்லி, 675 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், முட்டைக்கோழி, ஒரு கிலோ, 88 ரூபாய், கறிக்கோழி, ஒரு கிலோ, 116 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
