உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 11, 2026 01:54 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், ஜூன், 1ல், முட்டை கொள்முதல் விலை, 570 காசாக நிர்ணயிக்கப் பட்டது.
தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு, 26ல், 650 காசாக உயர்ந்தது. இதுவே, கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டையின் உச்சபட்ச விலை.
கடந்த, 15 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலை மேலும், 5 காசு உயர்த்தப்பட்டு, முட்டை பண்ணை கொள்முத ல் விலை, 655 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை வரலாற்றில் இது புதிய உச்சம்.
