உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 17, 2026 07:34 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், படிப்படியாக ஏற்றம் கண்ட முட்டை பண்ணை கொள்முதல் விலை, நேற்று மாலை 640 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில், 2025 டிச., 23ல், 640 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதே, உச்சபட்ச கொள்முதல் விலையாக இருந்தது.
இந்நிலையில், நேற்று, 640 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதன் மூலம், மீண்டும் உச்சபட்ச விலையை எட்டியுள்ளது.
தொடர்ந்து விலை அதிகரித்து, வரலாற்றில் முதல் முறையாக, முட்டை கொள்முதல் விலை, 7 ரூபாய் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
