ADDED : மே 18, 2025 09:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தியில் வயது முதிர்ந்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதி, மே 2ம் தேதி மர்மநபர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக ஈரோட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்த நபர்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல் நடந்த படுகொலையில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.