உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 17, 2026 07:39 PM
ADDED : அக் 17, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: கடையம் அருகே, ஜானகி பாப்பா, 82, என்பவரை கொலை செய்து, 12 சவரன் நகைகளை கொள்ளையடித்த தொழிலாளி கணேசன், 30, கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி ஜானகி பாப்பா. இவரது வீட்டில் கட்டுமானப் பணிகள் நடந்ததால், தனியாக வசித்தார். அக்., 15 இரவு அவரை கொலை செய்த மர்ம நபர், 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.
கடையம் போலீசார் விசாரணையில், ஜானகி வீட்டில் கட்டுமான ‘சென்ட்ரிங்’ வேலை பார்த்த, குத்தபாஞ்சான் பகுதியை சேர்ந்த கணேசன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 11 சவரன் நகைகளை மீட்டனர்.
