UPDATED : மே 20, 2025 07:47 AM
ADDED : மே 20, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை வலையங்குளம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த அம்மாபிள்ளை 65, இவரது பேரன் வீரமணி 10. இவர்களின் பக்கத்து வீட்டுப் பெண் வெங்கட்டி 55. மூவரும் நேற்று அம்மா பிள்ளை வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். மூவரையும் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வெங்கட்டி இறந்தார். அம்மாபிள்ளை, வீரமணி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.