ADDED : டிச 23, 2024 05:05 AM

சென்னை : மின்சார வாகனங்களுக்கான, 'சார்ஜிங்' வசதி அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம், 1,413 மையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மின் வாகனங்களுக்கு தடையின்றி எளிதில், 'சார்ஜிங்' வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ.,க்கு ஒன்று, மாநகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ.,க்கு ஒன்று என்ற வீதத்தில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு ஏற்ப, இந்தியன் ஆயில், எனர்ஜி எபிஷியன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், சார்ஜிங் மையங்களை அமைத்து வருகின்றன. தமிழக மின் வாரியம், 100 துணை மின் நிலையங்களின் வளாகங்களில், சார்ஜிங் மையங்கள் அமைக்க உள்ளது.
தற்போது நாடு முழுதும், 25,202 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழகம், 1,413 மையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, 5,765 சார்ஜிங் மையங்களுடன் முதலிடத்திலும், மஹாராஷ்டிரா, 3,728 உடன் இரண்டாவது இடத்திலும், உ.பி., 1,989 மையங்களுடன் மூன்றாவது இடத்திலும், டில்லி, 1,941 உடன் நான்காவது இடத்திலும் உள்ளன.